நான் பார்த்த வேகப்பந்து வீச்சின் மிகச்சிறந்த தொடர் - ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பேட்டர்கள் சொதப்பினாலும் பந்துவீச்சில் தனி ஒருவனாக ஆஸ்திரேலிய பெட்டர்களை திணறடியத்த ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியனார். இதன்மூலம் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும், இத்தொடருக்கான தொடர்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது நான் பார்த்த வேகப்பந்து வீச்சின் மிகச்சிறந்த தொடர். ஆம், இந்தத் தொடரின் பெரும்பகுதிக்கு வேகப்பந்து வீச்சாளர்களான அவர்களுக்கு நல்ல நிலைமைகள் இருந்தன. ஆனால் இந்தத் தொடரில் மற்ற எவருடனும் ஒப்பிடும்போது, இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவதை நீங்கள் பார்த்தபோது, அவர் பேட்டிங்கை மிகவும் கடினமாக்கினார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டாப்-ஆர்டரிலும் நிறைய தரமான பேட்டர்கள் உள்ளனர். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் அனைவரையும் வெவ்வேறு நேரங்களில் சாதாரண வீரர்களாக காட்டினார்” என்று பாராட்டியுள்ளார். நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணியை தடுமாறவைத்த ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக 5ஆவது டெஸ்ட் போட்டியின் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.