அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பும்ரா!

Updated: Mon, Jul 31 2023 21:33 IST
Image Source: Google

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நட்சத்திர வீரர் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆசிய கோப்பை தொடங்கும் முன்பு இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்துக்கு சென்று விளையாடி இருக்கிறது.

இதில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. டி20 தொடரில் எப்போதும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படும் நிலையில் தற்போது புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். பும்ரா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது உடல் தகுதியை எட்டி விட்டார். இதன் காரணமாக அவர் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

மேலும் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் இந்த அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சிஎஸ்கே அணியின் சிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அதிரடி வீரர் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

சுழற் பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தர்,  ஷபாஸ் அகமத், ரவி பிஷ்னாய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர்களாக பிரசித் கிருஷ்ணா, ஆர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் உள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் இந்த தொடரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என பிசிசிஐ தேர்வுக் குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

எனினும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ரா தான் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்தார். இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. முதல் டி20 போட்டி வரும் 18ஆம் தேதியும் இரண்டாவது டி20 வரும் 20ஆம் தேதியும் மூன்றாவது டி20 வரும் 23ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் முடிந்தவுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி: ஜஸ்ப்ரித் பும்ரா (கே), ருதுராஜ் (து. கே) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை