துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியும் அசத்தியது. 

Advertisement

மேலும் இத்தொடரில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இத்தொடருக்கு முன்னதாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வார்னர் சிறப்பாக விளையாடினார்.

Advertisement

இந்நிலையில் முதல் டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றதற்காக ஆஸ்திரேலிய அணியை வாழ்த்திய கேண்டீஸ், தனது மற்றொரு பதிவில், தனது கணவருக்கு வாழ்த்துக்களை அனுப்பினார்.

அவர் "ஃபார்மில் இல்லை, மிகவும் வயதானவர் மற்றும் மெதுவாக செயல்படுபவர்! வாழ்த்துக்கள் வார்னர்”என்று எழுதினார். இந்த வாழ்த்துச் செய்தி, வார்னரை விமர்சித்தவர்களுக்கு அவர் கொடுக்கும் பதிலடியாக பார்க்கப்படுகிறது.

 

Also Read: T20 World Cup 2021

Advertisement

ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து ஃபார்மில் இல்லாததால், ஹைதராபாத் அணியில் இருந்தும் ஓரம் கட்டப்பட்ட டேவிட் வார்னர், இந்த போட்டித் தொடரில், 7 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 289 ரன்களை குவித்து, 2021 டி 20 உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார் வார்னர்.  303 ரன்களுடன் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் இருக்கிறார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News