ஆசிய கோப்பை 2022: கோலி மீண்டும் ஃபார்ம்க்கு திரும்புவார் என நம்புகிறோம் - கேஎல் ராகுல்!

Updated: Fri, Aug 26 2022 22:02 IST
Image Source: Google

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடரானது துவங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் என ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் இந்த தொடரானது ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை துபாய் மற்றும் ஷார்ஜியா ஆகிய மைதானங்களில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாகிஸ்தான் போட்டிக்கான தயாரிப்பு பணி குறித்தும், விராட் கோலி குறித்த கேள்விக்கு கேஎல் ராகுல் பதிலளித்தார். இந்த கேள்விகளுக்கு எல்லாம் அமைதியாக பதில் அளித்த ராகுல், கோலியை பற்றி பேசும் போது கொஞ்சம் பொங்கி விட்டார். 

இதுகுறித்து பேசிய கேஎல் ராகுல், “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம். இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிக சவாலான ஒன்றாக இருக்கும். கடந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியை தழுவினோம். அதன் பிறகு இப்போது தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இரு அணிகளும் இது போன்ற பெரிய தொடரில் தான் சந்திக்கிறோம். இதற்கு முன்பு நாங்கள் எவ்வளவு முறை மோதினோம், எவ்வளவு முறை வென்றோம் என்பது எல்லாம் கணக்கில் வராது.

நாங்கள் மோதும் போது அனைத்தும் போட்டி அன்று ஜீரோவிலிருந்து தான் தொடங்கும். டி20 உலகக் கோப்பையில் அடைந்த தோல்வி நிச்சயம் எங்களை பாதித்தது. டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, போட்டியை அணுகுவதில் எங்கள் அணியில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் கேப்டனின் பேச்சை கேட்டு நடக்கிறோம். அது எங்களுக்கு நல்ல பலனை தருகிறது.

ஷாகின் ஆஃப்ரிடி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் ஆசிய கோப்பையில் விளையாடி இருந்தால், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு எங்களுக்கும் ஒரு நல்ல பயிற்சியாக அமைந்திருக்கும். விராட் கோலி நல்ல மன உத்வேகத்துடன் உள்ளார். வெளியே நீங்கள் பேசுவதுக்கு எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. விராட் கோலி நிச்சயம் எங்களுக்கு முன்பை போல் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தருவார்.

கோலி மீண்டும் ஃபார்ம்க்கு திரும்புவார் என நம்புகிறோம். நான் காயத்தில் இருந்த போது கோலி ஆடிய மேட்சை பார்த்தேன். அப்போது அவர் பார்ம் அவுட் ஆன மாதிரியே விளையாட வில்லை. முதல் போட்டியில் எப்போது வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை தொடங்க ஆர்வமாக உள்ளோம். இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்தப் போட்டிக்காக நன்கு தயாராகி உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை