தொடரின் மிகச்சிறந்த கேட்ச்சை பிடித்த ரீஸ் டாப்லி; ஆச்சரியத்தில் உறைந்த ரோஹித் - காணொளி!

Updated: Fri, Apr 12 2024 14:03 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதிலும் குறிப்பாக தினேஷ் கார்த்திக்கின் இறுதிநேர அதிரடி, பும்ராவின் ஐந்து விக்கெட்டுகள், இஷான் கிஷான், ரோஹித் சர்மாவின் தொடக்க, சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி ஷாட்டுகள், ஹர்திக் பாண்டியாவின் ஃபினிஷிங் என அனைத்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 196 ரன்களை குவிக்க, அதனைத்துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியோ எந்தவொரு தடையும் இன்றி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு மற்றும் ஃபில்டிங் இரண்டும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் அவற்றையெல்லாம் தனது ஒரே கேட்ச்சின் மூலம் ரீஸ் டாப்லி மறக்கச்செய்துள்ளார். ஏனெனில் அணியின் நம்பர் ஒன் ஃபீல்டர் என போற்றப்படும் கிளென் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து இரண்டு கேட்சுகளை விட்ட சமயத்தில், ரீஸ் டாப்லி பிடித்த அந்த கேட்ச் இந்த தொடரின் மிகச்சிறந்த கேட்ச் என வர்னணனையாளர்களால் பாராட்டப்பட்டது. அந்தவகையில் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடிய போது, அவருக்கு அறிமுக வீரரான வில் ஜேக்ஸ் பந்துவீசினார். 

 

அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய ரோஹித் சர்மா, இரண்டாவது பந்தை ஃபைன் லெக் திசையில் அடிக்க முயன்றார். அப்போது ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரீஸ் டாப்லீ யாரும் எதிர்பார்க்காத வகையில் டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்சைப் பிடித்து அசத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரோஹித் சர்மாவே ஒருநிமிடம் அச்சரியத்தில் உறைந்தார். மேலும் பந்தை பிடித்த ரீஸ் டாப்லியும் தாம் தான் அந்த கேட்சை பிடித்தமா என்பது போல் தனது கைகளை திரும்ப திரும்ப பார்த்தார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலானதுடன் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை