வங்கதேச டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியில் மூன்று மாற்றங்கள்!

Updated: Tue, Aug 26 2025 19:38 IST
Image Source: Google

Netherlands Squad For Bangladesh Tour: வங்கதேச தொடருக்கான நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக, நெதர்லாந்து அணி முதல் முறையாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் வங்கதேச டி20 தொடருக்கான 15 பேர் அடங்கிய நெதர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான இந்த அணியில், ஃபிரெட் கிளாசென், டிம் பிரிங்கிள், விக்ரம்ஜித் சிங், பென் ஃபிளெட்சர் உள்ளிட்டோர் டி20 அணியில் கம்பேக் கொடுக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த அணியில் இடம்பிடித்திருந்த ரியான் கெலின், ஃபிரெட் கிளாசென் மற்றும் சாகிப் சுல்ஃபிகர் ஆகியோர் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக 17 வயது வீரர் செட்ரிக் டி லாங்கேவை அணியில் சேர்த்துள்ளது. இதுதவிர்த்து வலது கை வேகப்பந்து வீச்சாளர் செபாஸ்டியன் பிராட் மற்றும் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் சுல்பிகர் ஆகியோரும் நெதர்லாந்து டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் வீரர்கள் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், அறிமுக வீரர்களில் வருகை அதனை சரி செய்யும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

நெதர்லாந்து அணி: காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஷாரிஸ் அகமது, நோவா குரோஸ், டேனியல் டோரம், ஆர்யன் தத், பென் ஃபிளெட்சர், செட்ரிக் டி லாங்கே, செபாஸ்டியன் பிராட், சிக்கந்தர் சுல்ஃபிகார், கைல் கெலின் தேஜா நிடமானுரு, மேக்ஸ் ஓ'டவுட், டிம் பிரிங்கிள், விக்ரம் சிங், பால் வான் மீகெரென்,

Also Read: LIVE Cricket Score

வங்கதேச அணி: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், சைஃப் ஹாசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷைஃப் உதீன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை