பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் குறித்து இயன் சேப்பல் கருத்து!

Updated: Mon, Jan 30 2023 18:16 IST
Image Source: Google

 இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் முடிந்துவிட்ட நிலையில், தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் முடிந்த பின், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. மேலும், இந்த தொடர் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தீர்மானிக்கும் தொடருமாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதும். இப்போதைக்கு 75.56 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது உறுதி.

அதேசமயம் 58.93 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, அந்த இடத்தை வலுவாக தக்கவைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை 2-0 அல்லது 3-0 அல்லது 2-1 அல்லது 3-1 என வெல்ல வேண்டும். எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். கடைசி 2 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடர்களை வென்றது. எனவே அதற்கு இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், “ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகிய இந்திய வீரர்களுக்கு முக்கியமான டாஸ்க் என்றால் அது, நேதன் லயனுக்கு எதிராக நல்ல மனவலிமையை பெற்றிருக்க வேண்டும். அவர் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடும் மனநிலையில் இருக்க வேண்டும். 

நதன் லயனை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஆடுகளங்கள் இருக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய, முக்கியமான அந்த 3 அஸ்திரங்களை சார்ந்திருக்கும். இந்திய பந்துவீச்சாளர் மிகப்பெரிய டாஸ்க் என்னவென்றால், செம ஃபார்மில் ரன்களை குவித்துவரும் ஸ்டீவ் ஸ்மித்தை கட்டுப்படுத்துவதுதான். ஸ்டீவ் ஸ்மித்தையும் நேதன் லயனையும் கட்டுப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை