தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டர்பனில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் லாரா வோல்வார்ட், சோலே ட்ரையன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சோலே ட்ரையான் 45 ரன்களையும், வோல்வார்ட் 35 ரன்களையும் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சார்லீ டீன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் 34 ரன்களையும், மையா பௌச்சர் 33 ரன்களையும் சேர்த்து அணிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதேசமயம் நாட் ஸ்கைவர் 20 ரன்களையும், டேனியல் வையட் 25 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.

இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சார்லீ டீன் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் சார்லீ டீன் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்படி இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை வீசிய சார்லீ டீன் அந்த ஓவரின் கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை மரிஸான் கேப் விக்கெட்டை வீழ்த்தினார். 

அதன்பின் இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை சார்லீ டீன் வீச, அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் நதின் டி கிளார் மற்றும் சினாலோ ஜாஃப்டா அகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை எனும் சாதனையையும் சார்லி டீன் படைத்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இங்கிலாந்து மகளிர் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகள் 

  • கரோல் ஹோட்ஜஸ் - டென்மார்க் அணிக்கு எதிராக, 1993, பான்ஸ்டெட்
  • கிளேர் கானர் - இந்திய அணிக்கு எதிராக, 1999, நார்தாம்ப்டன்
  • சார்லி டீன் - தென் அப்பிரிக்க அணிக்கு எதிராக, 2024, டர்பன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News