ஐபிஎல் 2024: அடுத்த கோப்பைக்கு தயாரான சென்னை சூப்பர் கிங்ஸ்; முழு வீரர்கள் பட்டியல்!

Updated: Tue, Dec 19 2023 22:38 IST
ஐபிஎல் 2024: அடுத்த கோப்பைக்கு தயாரான சென்னை சூப்பர் கிங்ஸ்; முழு வீரர்கள் பட்டியல்! (Image Source: Google)

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் தற்பொழுது துபாயில் இன்று நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலக்குழு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக சரியான விலைக்கு வீரர்களை வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நடந்து முடிந்த ஏலத்தில் நியூசிலாந்தின் இளம் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை ரூ.1.80 கோடிக்கு வாங்கியது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஷர்துல் தாகூரை 4 கோடிக்கும், நியூசிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டர் டேரில் மிட்சலை ரூ.14 கோடிக்கும் வாங்கி அசத்தியது.

அதே சமயத்தில் எப்பொழுதும் அனுபவ வீரர்களின் மேல் முதலீடு செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், இந்த முறை புதிய அணுகுமுறை உடன், 20 வயதான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அதிரடி இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு மேல் கொடுத்து எடுத்து ஆச்சரியப்படுத்தியது. அம்பதி ராயுடுக்கான இடத்தை நிரப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முழுவதுமாக இன்று ஏலத்தில் செயல்பட்டது.

ஒட்டுமொத்தமாக இன்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. எல்லோரும் அதுக்கு கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு புதிய வீரர்களை வாங்கியிருந்தாலும், அவர்கள் எல்லோருமே அந்தந்த இடங்களுக்கு சரியானவர்களாக இருக்கிறார்கள். 

அதன்படி இன்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்கூர், முஸ்தஃபிசூர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, அவினாஷ் ரால் அரவலி ஆகிய்ர் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம் எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரகானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், மொயின் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல், ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர், தீபக் சகர், மதிஷா தீக்ஷனா, மதிஷா பதிரனா, முகேஷ் சௌத்திரி, முஸ்தஃபிஸூர் ரஹ்மான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர், அவினாஷ் ராவ் ஆரவலி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை