ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாக குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது.அ அதன்படி 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 20ஆம் தேதி முதலும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதுதவிர்த்து மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதியானது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ள போட்டி அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம்.
Also Read: Funding To Save Test Cricket
சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அட்டவணை
- மார்ச் 23 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை
- மார்ச் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
- மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கௌகாத்தி
- ஏப்ரல் 5 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை
- ஏப்ரல் 8 - பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், சண்டீகர்
- ஏப்ரல் 11 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
- ஏப்ரல் 14 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
- ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மும்பை
- ஏப்ரல் 25 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
- ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை
- மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
- மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
- மே 12 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
- மே 18 - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்