ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 59ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

Advertisement

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

சென்னை அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளது. பிளே–ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அதே நேரத்தில் மற்ற சில அணிகளின் வெற்றி மற்றும் தோல்வியை சார்ந்தே சென்னை அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது. ஒருவேளை இன்று தோல்வியடைந்தால், சென்னை அணி பிளே–ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும்.

எனவே இப்போட்டியில் சென்னை அணி மும்பையை வீழ்த்தி 5ஆவது வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய 33ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

கடைசியாக டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ள சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே இணை நல்ல துவக்கம் தருகின்றனர். ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, கேப்டன் தோனி, ஷிவம் துபே உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம். பவுலிங்கில் டுவைன் பிராவோ (16 விக்கெட்), முகேஷ் சவுத்தரி (13) மகேஷ் தீக்சனா (12 விக்கெட்) நம்பிக்கை தருகின்றனர். ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது சென்னை அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

மறுபுறம், மும்பை அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 2 வெற்றி, 9 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே–ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட மும்பை அணி மீதமுள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம். கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான் எழுச்சி பெற வேண்டும். காயத்தால் சூர்யகுமார் யாதவ் விலகிய நிலையில் திலக் வர்மா, டிம் டேவிட், ராமன்தீப் சிங், போலார்டு கைகொடுத்தால் நல்லது. கொல்கத்தா அணிக்கெதிராக எதிராக 5 விக்கெட் சாய்த்த பும்ரா மீண்டும் மிரட்டலாம்.

இந்த சீசனில் சென்னையுடன் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் மும்பை  தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை வரிந்து கட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 35
  • மும்பை வெற்றி - 20
  • சிஎஸ்கே வெற்றி - 15
Advertisement

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, சிவம் துபே, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கே), மொயீன் அலி, டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், திலக் வர்மா, ராமன்தீப் சிங் / அன்மோல்ப்ரீத் சிங், டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரிட் பும்ரா, ரிலே மெரிடித்.

Advertisement

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் - டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, டிம் டேவிட், திலக் வர்ம
  • ஆல்-ரவுண்டர்கள் - மொயின் அலி, டேனியல் சாம்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - மகேஷ் தீக்ஷனா, டுவைன் பிராவோ, ஜஸ்பிரித் பும்ரா

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News