அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் புஜாரா ஓய்வு!

Updated: Sun, Aug 24 2025 20:37 IST
Image Source: Google

Cheteshwar Pujara Retirement: இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என்ற அழைக்கப்பட்டும் சட்டேஷ்வர் புஜாரா அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்திய அணியின் அனுபவ வீரர்களில் ஒருவர் சட்டேஷ்வர் புஜரா. இந்தியா அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான புஜாரா இதுவரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் அவர் 19 சதங்கள், 35 அரைசங்கள் என 7,195 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இவரது நிதான ஆட்டத்தின் காரணமாக இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்றும் ரசிகர்களை அழைப்பதுண்டு. 

மேலும் பல ஆண்டு காலமாக இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புஜரா, ஃபார்ம் இழப்பு காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். அதன்பின்னரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்றையா தினம் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

சட்டேஷ்வர் புஜாரா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "இந்திய ஜெர்சியை அணிவது, தேசிய கீதம் பாடுவது மற்றும் நான் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

Also Read: LIVE Cricket Score

எல்லாமும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். மிகுந்த நன்றியுடன் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ, சௌராஷ்டிரா அசோசியேஷனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இந்த பயணத்தில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு கிடைத்த அன்புக்கும், ஆதரவுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.  இதனையடுத்து சட்டேஷ்வர் புஜாராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை