ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது - கோலி சதம் குறித்து புஜரா கருத்து!

Updated: Fri, Oct 20 2023 20:15 IST
ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது - கோலி சதம் குறித்து புஜரா கருத்து! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், தொடரை நடத்தும் நாடான இந்திய அணியும் வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர்களும் அப்படியே விளையாடி சிறப்பாக ரன் சேர்த்தார்கள். அதே சமயத்தில் மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக திரும்பி வந்து தாக்குதல் தொடுத்தார்கள். 

மேலும் வங்கதேச மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெறும் 256 ரன்களுக்கு சுருண்டு விட்டார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து நல்ல அடித்தளத்தை உருவாக்கினார்கள்.

இதற்கு அடுத்து வந்த விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி அரைசதத்தை தாண்டினார். மேலும் அவர் 74 பந்துகளில் இருந்த பொழுது அவருக்கு சதத்திற்கு தேவைப்பட்ட ரன்களே, அணியின் வெற்றிக்கும் தேவையான ரன்களாக இருந்தது. இந்த நிலையில் அவரே மீதமிருந்த எல்லா பந்துகளையும் சந்தித்து எல்லா ரன்களையும் எடுத்து சதத்தை பூர்த்தி செய்தார். தற்பொழுது இது சமூக வலைத்தளத்தில் விமர்சனத்தை எழுப்பியது.

இதுகுறித்து பேசிய இந்திய அணி வீரர் சட்டேஷ்வர் புஜாரா, “விராட் அந்த நூறு ரன்கள் எடுக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் விரும்புகிறேன். ஆனால் எப்பொழுதும் பெரிய தொடர்களில் ரன் ரேட் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், நீங்கள் அதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு கட்டத்தில் ரன் ரேட்டுக்காக போராடும் பொழுது, அன்றைய நாளில் அப்படி விளையாடி இருக்கலாம் என்று திரும்பி வரவே முடியாது. எனவே இப்படியான தொடர்களில் ரன் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது” என்று விமர்சித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை