15ஆயிரம் ரன்களை எட்டுவதே இலக்கு - கிறிஸ் கெயில் 

Updated: Tue, Jul 13 2021 14:11 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

இப்போட்டியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 67 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். 

போட்டி முடிவுக்கு பிறகு பேசிய கிறிஸ் கெயில்,“டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14ஆயிரம் ரன்களை குவிப்பது மிகப்பெரிய சாதனை. ஆனால் நான் இப்போது 15 ரன்களை எட்ட முடிவு செய்துள்ளேன்.

அதேசமயம் 14ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர், மற்றும் அரைசதம் அடித்த மகிழ்ச்சியோடு தொடரை வென்றுள்ளது பெருமையாக உள்ளது. மேலும் நான் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட நிறைய போட்டிகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை