நியூசிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ரவி சாஸ்திரி!

Updated: Fri, Jun 25 2021 12:33 IST
coach-ravi-shastri-told-environment-of-southampton-is-the-big-reason-in-new-zealands-victory-at-wtc- (Image Source: Google)

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. பல வருட போராட்டத்துக்கு பிறகு முதல்முறையாக ஐசிசி கோப்பையை நியூஸிலாந்து அணி வென்றுள்ளது.

அதிலும் ஐசிசி முதல்முறையாக நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக நியூஸிலாந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதை இந்திய ரசிகர்களும் கூட கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்ளிட்ட வீரர்களும் நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியூஸிலாந்து அணியை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அவரது ட்விட்டர் பதில் ‘இந்த சூழலில் சிறந்த அணி வெற்றிப் பெற்றுள்ளது. உலகக்கோப்பைக்கான நீண்டகால காத்திருப்புக்குப் பின், தகுதியான வெற்றியாளர்களாக நியூஸிலாந்து உருவெடுத்துள்ளது. மாபெரும் விஷயங்கள் எளிதில் கிடைத்துவிடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இது உள்ளது. நன்றாக விளையாடினார்கள். வாழ்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.  ரவி சாஸ்திரியின் இந்த ட்விட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை