NZ vs SL, 1st ODI: ஷிப்லி வேகத்தில் வீழ்ந்தது இலங்கை!

Updated: Sat, Mar 25 2023 13:06 IST
Complete domination from New Zealand as Sri Lanka suffer a heavy defeat in Auckland! (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்றது.

இந்தப்போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட் பவுஸ் மற்றும் பின் ஆலென் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாட் பவுஸ் 14 ரன்னில் வீழ்நதார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் ஆலென் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதையடுத்து களமிறங்கிய வில் யங் 26 ரன், டேரில் மிட்செல் 47 ரன், டாம் லதாம் 5 ரன், கிளென் பிலிப்ஸ் 39 ரன், ரச்சின் ரவிந்திரா 49 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணி தரப்பில் சமிகா கருணாரத்னே 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி கமிறங்கியுள்ளது. தற்போது வரை அந்த அணி 2 ஓவர்களில் 14 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சியளித்தது. அந்த அணியின் தொடக்க வீரார் நுவனிந்து ஃபெர்னாண்டோ 4 ரன்களிலும், குசால் மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றியும் பதும் நிஷங்கா 9 ரன்களிலும், சரித் அசலங்கா 9 ரன்களிலும், தசுன் சனகா ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் வநிந்து ஹசரங்கா, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனால் இலங்கை அணி 76 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை