ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Updated: Thu, Aug 21 2025 19:51 IST
Image Source: Google

Sri Lanka Squad: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஒமன் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளனர். இதன் காரணமாக இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கும் தயாராகும் வகையில் இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதலும், டி20 தொடர் செப்டம்பர் மூன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சரித் அசலங்க இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக தொடர்கிறார். அதேசமயம், நட்சத்திர ஆல் ரவுண்டர் வநிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் டாப் ஆர்டர் பேட்டரான நுவனிந்து ஃபெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு குசால் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷனா, பதும் நிஷங்கா, தில்சன் மதுஷங்கா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிஷங்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க

Also Read: LIVE Cricket Score

இலங்கை vs ஜிம்பாப்வே தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 29, ஹராரே
  • 2வது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 31, ஹராரே
  • முதல் டி20ஐ - செப்டம்பர் 3, ஹராரே
  • 2வது டி20ஐ - செப்டம்பர் 6, ஹராரே
  • 3வது டி20ஐ - செப்டம்பர் 7, ஹராரே
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை