வெஸ்ட் இண்டீஸ் -  இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

இந்த போட்டியின் இறுதிக்கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியின் போது பெரிய இலக்கினை சேசிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிய இடைவெளியில் போட்டியை தோற்று இருந்தது. அதனை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியானது இறுதிவரை போராடி கடைசியில் தோல்வி அடைந்தது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கும். 

Advertisement

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டிஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான், “நிச்சயமாக இந்த போட்டியில் தோற்றது வருத்தமாக தான் உள்ளது. கடைசி இரண்டு ஓவர்களில் நாங்கள் மிகவும் பதட்டம் அடைந்து விட்டோம். இந்திய அணி வீரர்கள் கடைசி 6 ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அந்த ஆறு ஓவர்களில் தான் நாங்கள் போட்டியை அவர்களிடம் தோற்றோம். ஸ்பின்னர்கள் வீசும் போது எளிதாக அடிக்க முடிகிறது என்பதனால் நாங்கள் எங்களது திட்டத்தை மாற்றி மாற்றி செயல்படுத்தினோம். 

ஆனாலும் இறுதியில் அக்ஸர் பட்டேலின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போனது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அக்ஸர் படேல் இந்த போட்டியில் அருமையாக பேட்டிங் செய்தார். அவரது அந்த ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். எங்கள் அணியின் துவக்க வீரரான சாய் ஹோப் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது நூறாவது போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். எங்கள் அணிக்காக அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே போன்று பேட்டிங்கில் நாங்கள் அனைவருமே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். அதேபோன்று பந்து வீச்சிலும் இறுதிவரை போராடினோம். ஆனாலும் இறுதியில் தோற்றது வருத்தம் தான். நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News