ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை - மேத்யூ வேட்!

Updated: Sat, Dec 02 2023 10:19 IST
ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை - மேத்யூ வேட்! (Image Source: Google)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது ராய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்று. 

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு சேர்த்து இந்து தொடரையும் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட், “தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் அணி வீரர்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டனர். இன்றைய போட்டிக்கு முன் ஒரு மீட்டிங் இருந்தது. அனைவரும் சுந்திரமாக, முடிந்ததை வெளிப்படுத்துங்கள் என அந்த மீட்டிங்கில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சிறப்பாக செயல்பட்டனர். 

இருப்பினும், ஸ்பின்னர்கள் அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் பந்தை அபாரமாக சுழற்றியதால், அப்போது அதிக ரன்களை அடிக்க முடியவில்லை. விக்கெட்களும் அடுத்தடுத்து விழுந்தது. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். டி20 உலகக் கோப்பை முன் சிறப்பாகவே தயாராகி வருகிறோம்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை