சிபிஎல் 2021: ராயல்ஸிடம் வீழ்ந்தது தலாவாஸ்!

Updated: Sun, Aug 29 2021 11:45 IST
Image Source: Google

சிபிஎல் தொடரில்  இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்போடாஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கிளென் பிலீப்ஸ், ரெய்ஃபெர் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 56 ரன்களுடனும், ரெய்ஃபெர் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தது. தலாவாஸ் அணி தரப்பில் பெருமாள் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தலாவாஸ் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன் மூலம் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை