சிபிஎல் 2021: பேட்ரியாட்ஸை பந்தாடிய தலாவாஸ்!
சிபிஎல் டி20 நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதையடுத்டு களமிறங்கிய தலாவாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ப்ரூக்ஸ் 43 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியில் லீவிஸ் 5, கெயில் 12, ட சில்வா 28 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவன் தாமஸ் 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தக்கப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்களில் பேட்ரியாட்ஸ் அணி 147 ரன்களை மட்டுமே எடுத்தது. தலாவாஸ் தரப்பில் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
இதன் மூலம் ஜமைக்கா தலாவாஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸை வீழ்த்தி அசத்தியது.