சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பார்போடாஸ் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஆசம் கான் 28 ரன்களைச் சேர்த்தார். வாரியர்ஸ் அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்திய வாரியர்ஸ் அணியில் சந்தர்பால் ஹெம்ராஜ் ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை மிரளவைத்தார்.
இதனால் 56 பந்துகளில் சதமடித்ததுடன், வாரியர்ஸ் அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார். இதன் மூலம் வாரியர்ஸ் அணி 14.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸை வீழ்த்தியது.
மேலும் இப்போட்டியில் சதமடித்த சந்தர்பால் ஹேம்ராஜ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.