சிபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்போடாஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி அசாம் கானின் அதிரடியான அரைசதத்தினால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. இதில் ஆசம் கான் 50 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 31 ரன்களை எடுத்தனர். ஜமைக்கா அணி தரப்பில் பிரிட்டோரியர்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்தில் ஜமைக்கா அணிக்கு கென்னர் லூயிஸ் ஆரம்பம் முதலே அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருடன் இணைந்த ப்ரூக்ஸும் தனது பங்கிற்கு பவுண்டரி மழை பொழிந்தார்.
இதனால் 17.4 ஓவர்களிலேயே ஜமைக்கா தலாவாஸ் அணி இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் அதிரடியாக விளையாடி 89 ரன்களை சேர்த்த கென்னர் லூயிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.