சிபிஎல் 2021: பொல்லார்ட் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த நைட் ரைடர்ஸ்!

Updated: Tue, Sep 07 2021 21:25 IST
Image Source: Google

சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்றும் வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தலாவாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு லெண்டல் சிம்மன்ஸ் - லியானார்டோ ஜூலியன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் ஜூலியன் 17 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்மன்ஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கிரேன் பொல்லார்ட் - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைக் குவித்தது. இதில் பொல்லார்ட் 39 ரன்களுடனு, செய்ஃபெர்ட் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை