சிபிஎல் 2021: கிங்ஸை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தலாவாஸ்!
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய தலாவாஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 255 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுப்பினும் டிம் டேவிட் அரைசதம் கடந்து நம்பிக்கை கொடுத்தார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இறுதியில் 17.3 ஓவர்களில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஜமைக்கா தலாவாஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் அணியை வீழ்த்தி, தொடரின் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.