சிபிஎல் 2021: தலாவாஸை வீழ்த்தி பேட்ரியாட்ஸ் அபார வெற்றி!

Updated: Thu, Sep 02 2021 12:45 IST
Image Source: Google

சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்வுசெய்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தாலும், தொடர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.

அதன்பின்வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் களமிறங்கிய ரூதர்ஃபோர்ட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன் மூலம் 17.4 ஓவர்களிலேயே பேட்ரியாட்ஸ் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூதர்ஃபோர்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை