சிபிஎல் 2021: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் வெற்றி பெற்றது பேட்ரியாட்ஸ்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மொதின. இதில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில் முகமது ஹபீஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். பின் அவருடன் இணைந்த ஹெட்மையரும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இதனால் 20 ஓவர்களில் வாரியர்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 70 ரன்களையும், ஹெட்மையர் 52 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இலக்கை துரத்திய பேட்ரியட்ஸ் அணிக்கு டேவன் தாமஸ் - எவின் லூயிஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 69 ரன்களை செர்த்து அசத்தியது.
பின் தாம்ஸ் 31 ரன்களிலும், லூயிஸ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரூதர்ஃபோர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தடுடன் அணியை வெற்றிபெறவும் செய்தார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதன்மூலம் 19.2 ஓவர்களில் பேட்ரியாட்ஸ் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்திய வாரியர்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரூதர்ஃபோர்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.