சிபிஎல் 2021: பேட்ரியாட்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தது செயிண்ட் லூசிய கிங்ஸ்!
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, செயிண்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
அதன்படி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 120 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 64 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய பேட்ரியாட்ஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தொடக்க வீரர் எவின் லூயிஸ் மட்டும் தனி ஒருவனாக போராடி 73 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் 16.5 ஓவர்களிலேயே பேட்ரியாட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. கிங்ஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப், கீமா பால் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதன் மூலம் செயிண்ட் லூசிய கிங்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றது, அந்த அணியின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.