சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அண்ட்ரே ஃபிளட்சர் 11 ரன்களிலும், மார்க் டியால் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரகீம் கார்ன்வால் - ரோஸ்டன் சேஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் இருவரும் அரைசதமடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 43 ரன்களில் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கீமோ பால் அதிரடியாக விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது.
பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் ஃபாவத் அஹ்மத், நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்ரியாட்ஸ் அணி விளையாடவுள்ளது.