சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 28 ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Advertisement
அதன்படி களமிறங்கிய கிங்ஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளட்சர் - ரகீம் கார்ன்வால் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
Advertisement
பின் 31 ரன்களில் ஃபிளட்சர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரகீம் கார்ன்வாலும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 56 ரன்களை எடுத்தார். ராயல்ஸ் அணி தரப்பில் கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.