சிபிஎல் 2021: தலாவாஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!

Updated: Mon, Sep 06 2021 11:03 IST
CPL 2021: TKR pick up easy win despite Tallawahs' late recovery (Image Source: Google)

சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய தலாவாஸ் அணி  15 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகாளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடிசேர்ந்த பிராத்வைட் - இமாத் வாசிம் அதிர்டியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பிராட்வவைட் 58 ரன்களைச் சேர்த்தார். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க வீரர் லிண்டல் சிம்மன்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன், அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதனால் 17.1 ஓவர்களிலேயே நைட் ரைடர்ஸ் அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டல் சிம்மன்ஸ் ஆட்டநாகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை