கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழைக் குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பார்போடாஸ் அணியில் கார்வால், மேயர்ஸ், போஷ்க், குயின்டன் டி காக் என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

இறுதிவரை களத்திலிருந்த ஹோல்டர் 40 ரன்களைச் சேர்க்க, 16 ஓவர்கள் முடிவில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்தது. கயானா அணி தரப்பில் சந்தர்பால் ஹேம்ராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணியில் பால் ஸ்டிர்லிங், ஹேம்ராஜ், கீமா பால், ஹெட்மையர், கிளாசென், பிளாக்வுட், செஃபர்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களோடு நடையைக் கட்டினர். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் 16 ஓவர்கள் முடிவில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பார்போடாஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News