சிபிஎல் 2023 குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது நைட் ரைடர்ஸ்!

Updated: Thu, Sep 21 2023 12:59 IST
சிபிஎல் 2023 குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது நைட் ரைடர்ஸ்! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ்வில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணிக்கு சைம் அயுப் - ஓடியன் ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஓடியன் ஸ்மிட் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷாய் ஹோப்பும் 2 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயுப் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய அஸாம் கான் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் டிரென்ஸ் ஹிண்ட்ஸ், வக்கர் சலாம்கெல் தலா 2 விக்கேட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் சத்விக் வால்டன் - மார்க் தயால் களமிறங்கினர். இதில் மார்க் தயால் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திருக்கும்பினர். அதேசமயம் மறுப்பக்கம் அதிரடியாக விளையாடி வந்த சாத்விக் வால்டன் அரைசதம் கடந்ததுடன 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 80 ரன்களை விளாசித்தள்ளினார்.

இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு சிபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை