கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ் 5 ரன்களுக்கும், கேப்டன் ஆண்ட்ரே ஃபிளட்சர் 9 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 22 ரன்களிலும், வநிந்து ஹசரங்கா 23 ரன்களுக்கும், ரைலீ ரூஸோவ் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய மைக்கைல் லூயிஸ் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மைக்கைல் லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 63 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக பேட்ரியாட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 153 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபால்கன்ஸ் தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஃபால்கன்ஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜஸ்டின் கிரீவ்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 29 ரன்களைச் சேர்த்திருந்த பிராண்டன் கிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களை எடுத்திருந்த ஜஸ்டின் கிரீவ்ஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அவர்களைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கோஃபி ஜேம்ஸ் மற்றும் சாம் பில்லிங்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். இதில் கோஃபி ஜேம்ஸ் 20 ரன்களுக்கும், சாம் பில்லிங்ஸ் 18 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜூவெல் ஆண்ட்ரூ, ஷமார் ஸ்பிரிங்கர், கேப்டன் கிறிஸ் கிரீன் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் அடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசீம் 17 ரன்களையும், அவருக்கு துணையாக ரோஷன் 15 ரன்களையும், ஃபேபியன் ஆலன் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசன் சிபிஎல் தொடரின் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய இமாத் வசீம் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News