வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் சிபிஎல் 12ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பேட்ரியாட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு எவின் லூயிஸ் - கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் எவின் லூயிஸ் 15 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கைம் மேயர்ஸும் 17 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபிளெட்சருடன் இணைந்த ரைலீ ரூஸோவ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்த அணியின் ஸ்கோரும் 150 ரன்களை எட்டியது. அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரைலீ ரூஸோவ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடர்ந்து. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதங்களைப் பதிவுசெய்ய, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 62 ரன்களை எடுத்திருந்த நிலையில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 13 ரன்களுக்கும், பனுகா ராஜபக்ஷா 9 ரன்களுக்கும், டெஸ்கார்டே 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதற்கிடையில் அதிரடியாக விளையாடி வந்த ஜான்சன் சார்லஸும் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 176 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 16.3 ஓவர்களில் இலங்கை எட்டியாதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜான்சன் சார்லஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News