சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணி ஹெட்மையரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. இதில் ஹெட்மையர் 45 ரன்களைச் சேர்த்தார்.

Advertisement

அதன்பின் கடின இலக்கை துரத்திய பேட்ரியாட்ஸ் அணிக்கு கிறிஸ் கெயில் - எவின் லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடித்தது. இதில் கெயில் 42 ரன்களில் ஆட்டமிழக்க, எவின் லூயிஸ் அரைசதம் அடித்து அசத்தினார். 

அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் பிராவோவும் தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 17.5 ஓவர்களிலேயே பேட்ரியாட்ஸ் அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. 

மேலும் இந்த வெற்றியின் மூலம் சிபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News