இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா!

Updated: Wed, Jul 03 2024 21:55 IST
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா! (Image Source: Google)

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தன் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. காரணம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள அரசில் பிரச்சனை காரணமாக இவ்விரு அணிகளும் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன. இதன் காரணமாக ஐசிசி நடத்தும் தொடகளில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றனர். 

இதன் காரணமாக இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் எழுந்தன. அதற்கு தகுந்தார்போல் ஐசிசியும் ஒவ்வொரு தொடரின் போது இவ்விரு அணிகளையும் ஒரே குழுவில் வைத்திருப்பதுடன், இவ்விரு அணிகளும் மோதும் படியான ஆட்டவணையை ஒவ்வொரு முறையும் வடிவமைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோது போட்டிகளுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளும் மீண்டும் இருதரப்பு தொடர்களில் விளையாட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துவருகின்றனர். மேற்கொண்டு இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியை நடுநிலை தன்மையுடன் நடத்த பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமானது இந்தியா, பாகிஸ்தான் அணிகளை வைத்து முத்தரப்பு தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது. 

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி, “இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு தொடரை நடத்த நாங்கள் அர்வமாக உள்ளோம். இருப்பினும் இதற்கான இறுதி முடிவை இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் தான் எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து முத்தரப்பு தொடரில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளதையடுத்து, ரசிகர்களும் இதற்கான தங்களது ஆதரவு குரல்களை எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இதற்கு பாகிஸ்தான் அணி சம்மதம் தெரிவித்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒருவேளை மூன்று அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு தொடர் நடைபெற்றால் நிச்சயம் அது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை