நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம் - குவியும் வாழ்த்துக்கள்!

Updated: Wed, Jan 05 2022 16:11 IST
Cricket Fraternity Lauds Bangladesh For Scripting History in New Zealand (Image Source: Google)

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பலமிக்க நியூசிலாந்து அணியை அதன் மண்ணில் இதுவரை டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என எந்த வடிவ கிரிக்கெட்டிலும் வங்கதேசம் வென்றதே இல்லை. ஆனால் அது இன்று மாறியுள்ளது. இதே போல நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேசம் பெறும் முதல் டெஸ்ட் வெற்றியும் இதுவே ஆகும்.

 

இதனால் இந்த வெற்றியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச அணியின் இந்த வெற்றியை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, வாசிம் ஜாஃபர் ஆகியோரும் பாராட்டியுள்ளனர். 

 

இந்நிலையில் வங்கதேச அணியின் வெற்றி கொண்டாட்டமும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் அனைத்து வீரர்களும் கூச்சல் போட்டுக்கொண்டு, நடனம் ஆடிக்கொண்டு உற்சாகத்துடன் இருக்கும் காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை