இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..! 

Updated: Thu, Apr 28 2022 20:07 IST
Cricket Image for Ben Stokes Appointed England Test Captain, Confirms ECB (Image Source: Google)

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்த ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்தது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.

ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி  மட்டுமே பெற்றது. தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் அண்மையில் விலகினார். 

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் என்று நேற்றே தகவல் வெளியான நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,061 ரன்களையும், 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை