ஐபிஎல் 2021: பயிற்சியில் களமிறங்கிய சிஎஸ்கே!

Updated: Sat, Aug 21 2021 16:11 IST
Image Source: Google

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் அங்கு நடைபெறவுள்ளது.

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பியுள்ளன. சிஎஸ்கே துபாயில் உள்ள விடுதியிலும், மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் உள்ள விடுதியிலும் தங்கியுள்ளனர். அங்கு கடந்த 13ம் தேதி முதல் குவாரண்டைனில் இருந்த வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளில் நெகட்டீவ் என்ற முடிவை பெற்றுள்ளனர். இதனையடுத்து இரு அணிகளும் தங்களது முதற்கட்ட பயிற்சிகளை தொடங்கி விட்டனர்.

 

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களின் பயிற்சி காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. தோனி முன்கூட்டியே பயிற்சி முகாம்களில் கலந்துக்கொள்வது, வீரர்களை தனது திட்டத்திற்கு ஏற்ப தயார் படுத்துவதற்காக தான். இந்த முறையும் அப்படி தான் செய்திருக்கிறார். அந்த வீடியோவில் இளம் வீரர்களுக்கு அவர் பேட்டிங் குறித்து அட்வைஸ்களை தெரிவித்து வருகிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை