இந்தியாவில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் நடப்பு சீசனில் இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - எம்ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் தூபே, ரச்சின் ரவீந்திரா, எம்எஸ் தோனி, சமீர் ரிஸ்வி ஆகியோர் உள்ளது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஷிவம் தூபே, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது செயல்பாடுகள் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அதேசமயம் அணியின் பந்துவீச்சில் தீபக் சஹார், முஸ்தஃபிசூர் ரஹ்மான், மஹீஷ் தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே போன்றோர் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்தஃபிசூர் ரஹ்மானின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்ததுடன், அணியின் வெற்றிக்கு உதவியது. இதனால் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். அவருடன் தீபக் சஹார், மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் நடப்பு ஐபிஎல் சீசனை ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது முதல் போட்டியிலேயே வலிமை வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா போன்றோர் உள்ளனர். அவர்களுடன் ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு தலைவலி தான்.

Advertisement

மறுபக்கம் அணியின் பந்துவீச்சில் முகமது ஷமி அணியில் இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தினாலும், அவருக்கு மாற்றாக தேர்வுசெய்யப்பட்டுள்ள உமேஷ் யாதவ் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அவருடன் மோஹித் சர்மா, ரஷித் கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோரும் அபாரமாக பந்துவீசி அசத்தியுள்ளனர். மேலும் அறிமுக வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் அபாரமாக பந்துவீசியுள்ளார். இதனால் குஜராத் அணியின் பந்துவீச்சு யுனிட்டும் பலமாக உள்ளது. இதன் காரணமாக நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

பிட்ச் ரிப்போர்ட்

பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த மைதானத்தின் ஆடுகளம் மெதுவாகவே உள்ளது. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். போட்டி தொடர்ந்து நடக்கும் போது ஏற்கனவே வறண்டு இருக்கும் பிட்ச் கூடுதலாக மெதுவாகிறது. இதனால் இங்கு பேட்டர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அதேசமயம் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு சில நல்ல ஸ்கோர்களும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Advertisement

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 05
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 02
  • குஜராத் டைட்டன்ஸ் - 10
Advertisement

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோஹித் சர்மா.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - விருத்திமான் சாஹா
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஸ்மத்துல்லா ஒமர்சாய் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - மோஹித் சர்மா, முஸ்தஃபிசூர் ரஹ்மான், ரஷித் கான்.

CSK vs GT IPL 2024 Dream11 Prediction, Today Match CSK vs GT, CSK vs GT Dream11 Team, Fantasy Cricket Tips, RCB vs PBKS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Chennai Super Kings vs Gujarat Titans

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News