ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சேப்பாக்கம்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த மைதானத்தின் ஆடுகளம் மெதுவாகவே உள்ளது. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். போட்டி தொடர்ந்து நடக்கும் போது ஏற்கனவே வறண்டு இருக்கும் பிட்ச் கூடுதலாக மெதுவாகிறது. இதனால் இங்கு பேட்டர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அதேசமயம் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு சில நல்ல ஸ்கோர்களும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 01
  • ல்க்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 02
  • முடிவில்லை - 01

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ் : அஜிங்கியா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மொயின் அலி, மகேந்திர சிங் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதிஷா பதிரனா.

Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, குர்னால் பாண்டியா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, குர்னால் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் – ரவி பிஷ்னோய், மதிஷா பதிரனா.

CSK vs LSG IPL 2024 Dream11 Prediction, Today Match Prediction, Today Match CSK vs LSG, CSK vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, CSK vs LSG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Chennai Super Kings vs Lucknow Super Giants

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News