Chennai Super Kings vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாளை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

CSK vs RCB: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை
  • நேரம் - மார்ச் 28, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

CSK vs RCB Pitch Report

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சதகமான இந்த மைதானத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியும். மேற்கொண்டு இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 10 சர்வதேச டி20 போட்டிகளின் முடிவில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

CSK vs RCB: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

CSK vs RCB Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 33
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 21
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 11
  • முடிவில்லை - 01

CSK vs RCB Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரஜத் படிதர், ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, குர்ணால் பாண்டியா
  • பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், கலீல் அகமது, நூர் அகமது.
Advertisement

Chennai Super Kings vs Royal Challengers Bengaluru Probable Playing XI

Chennai Super Kings Probable Playing XI : ரச்சின் ரவீந்திர, ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.

இம்பேக்ட் பிளேயர் - ராகுல் திரிபாதி.

Advertisement

Royal Challengers Bengaluru Probable Playing XI: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்ணால் பாண்டியா, ராசிக் சலாம், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.

இம்பாக்ட் பிளேயர் - தேவ்தத் படிக்கல்.

CSK vs RCB Dream11 Prediction, CSK vs RCB, CSK vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, CSK vs RCB Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Chennai Super Kings vs Royal Challengers Bengaluru

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News