Chennai Super Kings vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறிய நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

CSK vs RR Match Details

  • மோதும் அணிகள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
  • நேரம் - மே 20, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Arun Jaitley Stadium, Delhi Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 61ஆவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 14 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 9 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரையில் இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 145 ரன்களாக உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இந்த எண்ணிக்கை மாறுகிறது. ஏனெனில் கடந்த முறை இங்கு நடைபெற்ற 5 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணியே வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், இது அதிக ரன்களைக் கொண்ட ஆட்டங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

CSK vs RR Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

CSK vs RR Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 30
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 16
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 14

CSK vs RR Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- உர்வில் படேல், சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (துணை கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே
  • ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ரியான் பராக், வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் – நூர் அஹமத், துஷார் தேஷ்பாண்டே/மதிஷா பத்திரனா.
Advertisement

CSK vs RR Predicted Playing 11

Chennai Super Kings XI : ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், டெவால்ட் பிரீவிஸ், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, மத்திஷா பத்திரனா.

இம்பாக்ட் வீரர் - ஷிவம் துபே.

Advertisement

Rajasthan Royals XI : யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, குவெனா எம்பாகா, ஆகாஷ் மத்வால், துஷார் தேஷ்பாண்டே, ஃபசல் ஹக் ஃபரூக்கி.

இம்பாக்ட் வீரர் - ஷுபம் துபே.

CSK vs RR Dream11 Prediction, CSK vs RR, CSK vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, CSK vs RR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Chennai Super Kings vs Rajasthan Royals

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News