ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Apr 27 2024 18:58 IST
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, முன்னாள் சாம்பியன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் அதிரடியாக விளையாடிவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தங்கள் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டுப்படுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சேப்பாக்கம்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோர்கள் குவிக்க கூடிய மைதானங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. மேலும் முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை லக்னோ அணி சுலபமாக எட்டியது. மேலும் பனியின் தாக்கும் இருக்கும் என்பதால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 14
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 06

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கே), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி.கே), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம்/கிளென் பிலீப்ஸ், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஹென்ரிச் கிளாசென்
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட் (கேப்டன்), ஷிவம் துபே, டேரில் மிட்செல், அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்)
  • ஆல்ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள்: பேட் கம்மின்ஸ், மதீஷ பதிரனா, டிநடராஜன்

CSK vs SRH Dream11 Prediction, Today Match Prediction, Today Match CSK vs SRH, CSK vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, CSK vs SRH Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Chennai Super Kings vs Sunrisers Hyderabad

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை