ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 7ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்று ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.   

Advertisement

அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங் - ஆண்டி மெக்பிரைன் இணை களமிறங்கினர். ஆனால் அந்த அணிக்கு முதல் ஓவரிலேலே அதிர்ச்சி காத்திருந்தது.  நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் அண்டி பால்பிர்னி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழது ஏமாற்றமளித்தனர்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதுவரை தாக்குப்பிடித்த ஆண்டி மெக்பிரையனும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அயர்லாந்து அணி 70 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்யது. அதன்பின் ஜோடி சேர்ந்த கர்டிஸ் கேம்பர் - ஜார்ஜ் டக்ரெல் இணை போறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியது. பின் 69 ரன்களை எடுத்திருந்த டக்ரெல் 69 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விலையாடிய வந்த கர்டிஸ் காம்பேர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய காம்பேர் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 120 ரன்களைச் சேர்த்த நிலையில் கட்சி ஓவரின் 5ஆவது பந்தில் விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் பிராண்டன் மெக்கலம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News