இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மார்ஷ் 31 ரன்களிலும், டேவிட் வார்னர் 48 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 27 ரன்களுக்கும், லபுஷாக்னே 40 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் - கேமரூன் க்ரீன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் கிளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 77 ரன்களையும், கேமரூன் க்ரீன் 50 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 48 ரன்களையும் விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களை எடுத்தது. 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் 22 ரன்களிலும், இமாம் உல் ஹக் 16 ரன்களிலும், அப்துல்லா ஷஃபிக் 12 ரன்களுக்கும், ஷதாப் கான் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த இஃப்திகார் அஹ்மத் - பாபர் அசாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இஃப்திகார் அஹ்மத் 83 ரன்களிலும், பாபர் ஆசாம் 90 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது நவாஸும் அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லபுஷாக்னே 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது . 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News