சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விலகினார் டேல் ஸ்டெயின்!

Updated: Thu, Oct 17 2024 09:16 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக அணியின் பயிற்சியாளர்களை மற்றுதல், புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், வீரர்களை ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஐபிஎல் அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.  இதனால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம்பிடிபார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அந்தவகையில் கடந்த 2022ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெயின் நியமிக்கப்பட்டார். 

ஆனால் கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களால் அவர் பங்கேற்க முடியாமல் போனது. இதனல் நியூசிலாந்தின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஃபிராங்க்லின் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் எதிவரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே தனது பதவியில் இருந்து விலகுவதாக டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். இருப்பினும் எஸ்ஏ 20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பயிற்சியாளராக தேர்வேன் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளார். 

இதுகுறித்து டேல் ஸ்டெயின் தனது எக்ஸ் பதிவில், "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல்லில் பந்துவீச்சு பயிற்சியாளராக நான் சில வருடங்கள் பணியாற்றியதற்கு வாய்ப்பு கொடுத்த அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி, துரதிர்ஷ்டவசமாக, நான் எதிர்வரும் ஐபிஎல் 2025 தொடரில் பங்கேற்க மாட்டேன். இருப்பினும், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்க்லினையே பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் விட்டோரியுடன், ஜேம்ஸ் பிராங்க்ளில் இணைந்து பணியாற்றிய கடைசி ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை