டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் வர்னர்!

Updated: Tue, Apr 22 2025 13:51 IST
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் வர்னர்!
Image Source: Google

கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் போட்டி நேர்ற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெஷாவர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 46 ரன்களையும், முகமது ஹாரிஸ் 28 ரன்களையும், அல்ஸாரி ஜோசப் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால், பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அப்பாஸ் அஃப்ரிடி, குஷ்தில் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் டேவிட் வார்னர் அரைசதம் கடந்து 60 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் குஷ்தில் ஷா 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்த அசத்திய டேவிட் வார்னர் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 40 ரன்கலை எட்டியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் வார்னர் டி20 கிரிக்கெட்டில் தனது 13000 ரன்களை நிறைவு செய்தார. இதன்மூலம் இந்த எண்ணிக்கையை எட்டிய முதல் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலகின் ஆறாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றுள்ளார். 

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், கீரென் போல்லார்ட், பாகிஸ்தானின் சோயப் மாலி மற்றும் இந்திய அணியின் விராட் கோலி மட்டுமே இந்த சாதானையை படைத்துள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னர் இதுவரை 404 டி20 போட்டிகளில் விளையாடி 13019 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் அவர் 8 சதங்களையும், 109 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீர்ர்கள்

  • 14,562 – கிறிஸ் கெயில் (455 இன்னிங்ஸ்)
  • 13,610 – அலெக்ஸ் ஹேல்ஸ் (490 இன்னிங்ஸ்)
  • 13,571 – சோயிப் மாலிக் (515 இன்னிங்ஸ்)
  • 13,537 – கீரோன் போலார்டு (617 இன்னிங்ஸ்)
  • 13,208 – விராட் கோலி (390 இன்னிங்ஸ்)
  • 13,019 - டேவிட் வார்னர் (403 இன்னிங்ஸ்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை