கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)  தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த சில லீக் ஆட்டங்களிலேயே பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - விடிசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரின் முதலிரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர், பிரித்வி ஷா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதிசெய்துள்ளனர். அவர்களுடன் மிட்செல் மார்ஷ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற வீரர்கள் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் அந்த அணியின் வெற்றியைத் தடுப்பது கடினமே.

அணியின் பந்துவீச்சில் காயத்திலிருந்து மீண்டுள்ள இஷாந்த் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் அக்ஸர் படேல், முகேஷ் குமார், கலீல் அஹ்மத் போன்ற வீரர்களும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு துணையாக மிட்செல் மார்ஷும் ஒருசில ஓவர்களை வீசி எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார். இருப்பினும் அதிவேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே தொடர்ந்து ரன்களை வரி வழங்குவது அணிக்கு பெரும் சிக்கலாக உருவாகி வருவதால், அவருக்கு மாற்றாக ஜெய் ரிச்சர்ட்சன் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் இந்த சீசனில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணிகளில் ஒன்றாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. அந்த அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை ஈட்டியுள்ளதால், தனது ஹாட்ரிக் வெற்றிக்காக அந்த அணி போராடும் என எதிர்பார்க்கபடுகிறது. அணியின் பேட்டிங் வரிசையில் பில் சால்டுடன் சுனில் நரைன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து வருவது அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. அவர்களுடன் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரர்களும் உள்ளது அணியின் பலத்தை காட்டுகிறது.

Advertisement

அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஆல் ரவுண்டர்கள் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். அவர்களுடன் ஹர்ஷித் ரானா, அனுகுல் ராய், வருண் சக்ரவர்த்தி, மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்களும் எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகின்றனர். இருப்பினும் மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

பிட்ச் ரிப்போர்ட்

விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானமானது வரலாற்றில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடரில் இங்கு நடைபெறும் முதல் போட்டி இது என்பதும் கூடுதல் சிறப்பு. இதனால் பேட்டர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ரன்களை சேர்க்க உதவும். இதனால் இங்கு டாஸ் வெல்லு கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 15
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 16
  • முடிவில்லை - 01

நேரலை 

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Advertisement

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அபிஷேக் போரல், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அஹ்மத்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பில் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட், ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், பிரித்வி ஷா
  • ஆல்-ரவுண்டர் - சுனில் நாராயண், அக்சர் படேல், ஆண்ட்ரே ரசல் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - முகேஷ் குமார், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

DC vs KKR IPL 2024 Dream11 Prediction, Today Match DC vs KKR, DC vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, DC vs KKR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals vs Kolkata Knight Riders

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News